நலன் குமாரசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்..!

நலன் குமாரசாமியின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்..!

மக்கள் எதிர்ப்பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படங்களையும், பெரும் வெற்றி பெற்ற படங்களையும் உருவாக்குவதில் கை தேர்ந்த தயாரிப்பு நிறுவனங்களான சி.வி.குமாரின் ‘திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்’ மற்றும் கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ க்ரீன்’ நிறுவனமும் இணைந்து படங்களை வெளியிடப் போவதாக சென்ற ஆண்டே அறிவித்திருந்தன. 

அதன்படி தற்போது சி.வி.குமார் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிடவிருப்பதாக இந்தப் படத்துக்கு பூஜை போட்ட இன்றைக்கே அறிவித்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் தனது 14-வது படத்தின் தயாரிப்பை தொடங்கியுள்ளது. இந்தப் படத்தினை ‘சூது கவ்வும்’  வெற்றி படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்குகிறார். 

இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் மடோனா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தில் சமுத்திரகனியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லியோஜான் பால் படத் தொகுப்பை மேற்கொள்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நகரின் முக்கிய இடங்களில் நடைபெறவுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைத்தான் ஸ்டுடியோ கீரின் நிறுவனம் வெளியிடவிருக்கிறதாம். 

Our Score