full screen background image

‘என் ராசாவின் மனசிலே’ மாதிரி கிராமத்துக் கதையாம் ‘விருத்தாச்சலம்’ திரைப்படம்

‘என் ராசாவின் மனசிலே’ மாதிரி கிராமத்துக் கதையாம் ‘விருத்தாச்சலம்’ திரைப்படம்

லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பி.செந்தில்முருகன் தயாரிக்கும் படம் ‘விருத்தாசலம்’.

இந்தப் படத்தில் விருதகிரி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்தில் கச்சிராயநத்தம் என்ற கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தபோது, அவரது சிறந்த நிர்வாகத் திறனுக்காக அப்போதைய இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் விருது பெற்றவர்.

கதாநாயகிகளாக ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் சம்பத்ராம், பாவா லட்சுமணன், காதல் சரவணன், வெண்ணிலா கபடி குழு ஜானகி, மதுபானக்கடை ரவி, நெல்லை சிவா, ஆர்.என்.ஆர்.மனோகர், சுதா, இளங்கோ, அபிஷேக், நிருபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு    –   உமாசங்கர் –  சிவநேசன்

இசை   –  ஸ்ரீராம்

பாடல்கள்    –  இளையகம்பன்

எடிட்டிங்    –  வி.டி.விஜயன் –  சுனில்

கலை   –  நா.கருப்பையன்

நடனம்    –  சதீஷ்

சண்டை   –   பயர் கார்த்திக்

தயாரிப்பு மேற்பார்வை  –  கே.எஸ்.மயில்வாகனம்

தயாரிப்பு நிர்வாகம்  –  முருகதாஸ்

தயாரிப்பு   –  பி.செந்தில்முருகன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ரத்தன் கணபதி.

படம் பற்றி இயக்குனர் ரத்தன் கணபதி பேசும்போது, “ஒரு நாயகன் மூன்று கதாநாயகிகளை கொண்ட நான்கு முனை காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது இதன் திரைக்கதை.  நாயகனின் மனதில் மறைந்து கிடக்கும் காதல் யார் மீது.. எப்படி, ஏன்..? என்பதுதான் கதை.

சிறுவன் விருத்தகிரி வாழ்வில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அதனால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறான். அவன் குற்றவாளியாக காரணம் என்ன..? அங்கு அவன் யாரை சந்திக்கிறான்..? சீர்திருத்த பள்ளியில் சிறுவன் திருந்தினானா…? அவன் வாழ்வில் என்ன நடந்தது..? என்பது போன்ற திரைக்கதை அமைத்துள்ளோம்.

‘தேவர் மகன்’, ‘நாட்டாமை’, ‘என் ராசாவின் மனசிலே’, ‘பருத்தி வீரன்’ போன்ற படங்களை போல முழுக்க முழுக்க கிராமத்து கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படம் இது. சிறந்த கிராமத்து காதல் – மோதல் கதை.  மக்களுக்கு நிச்சயம் பிடித்த படமாகவும் வெற்றிப் படமாகவும் இந்த ‘விருத்தாசலம்’ இருக்கும்..” என்றார் இயக்குனர் ரத்தன் கணபதி.

 

Our Score