நடிகை சுஹாசினி மணிரத்னம் தனது 60-வது பிறந்த நாளை சமீபத்தில் கோலாகலமாகக் கொண்டாடியிருக்கிறார்.
நடிகை சுஹாசினி மணிரத்னம் 1961-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியன்று பிறந்தவர். இன்றைக்கு அவருக்கு 60-வது வயது பிறந்துள்ளது.
வருடா வருடம் தனது பிறந்த நாளை தனது நண்பிகள், நண்பர்களுடன் கொண்டாடுவது சுஹாசினியின் வழக்கம். இந்தாண்டு சுஹாசினிக்கு 60-வது வயது என்பதால் கூடுதல் சிறப்புடன் இந்தப் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார்.
இந்தப் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக சுஹாசினியின் இரண்டு அக்காள்களும் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். மேலும் தனது மொத்தக் குடும்பத்தினருடனும் அன்றைக்கு எல்டாம்ஸ் ரோட்டில் உள்ள கமல்ஹாசனின் பூர்வீக வீட்டில் தனது பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார் சுஹாசினி.

அதே நாளில் இரவில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனது திரையுலக நட்புகள் அனைவருக்கும் பார்ட்டி கொடுத்துள்ளார். இந்தப் பார்ட்டியில் நடிகர்கள் பிரபு, மோகன், குஷ்பூ, அம்பிகா, லிஸி, பூர்ணிமா பாக்யராஜ், இயக்குநர் கே.பாக்யராஜ், சுமலதா, இவர்களுடன் சுஹாசினியின் சித்தப்பாவான கமல்ஹாசனும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
இந்த விழாவில் தனது தோழிகளுடன் சுஹாசினி ஆடிய நடனம்தான் ஹைலைட் என்று சொல்லலாம். 60 வயது என்று சொல்லவே முடியாத அளவுக்கு இன்றும் இளமையுடன் இருக்கும் நடிகை சுஹாசினி என்றும் இளமையுடன் இருக்க வாழ்த்துகிறோம்.


