விஜய்யின் ரசிகர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றனர்..!

விஜய்யின் ரசிகர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றனர்..!

தமிழகத்தில் நடந்து முடிந்திருக்கும் ஊரக  உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தில் சார்பில் போட்டியிட்டவர்களில் 77 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தை தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் நடத்தி வருகிறார். பல்வேறு தேர்தல்களில் விஜய்யின் ரசிகர் மன்றத்தினர் போட்டியிட அனுமதி கேட்டும் விஜய் அனுமதி கொடுக்கவில்லை.

ஆனால், இந்தத் தேர்தலில் மட்டும் யாருக்கு விருப்பம் இருக்கிறதோ அவர்கள் போட்டியிட்டுக் கொள்ளலாம் என்று தனிப்பட்ட முறையில் விஜய் அனுமதியளித்திருந்தார்.

இதையடுத்து தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களிலும் பல்வேறு பகுதிகளில் ‘விஜய் மக்கள் இயக்க’த்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர்.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ‘தளபதி விஜய் மக்கள் இயக்க’த்தின் சார்பில் மொத்தம் 169 பேர் பல்வேறு பதவிகளுக்குப் போட்டியிட்டனர். இதில் 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக ‘விஜய் மக்கள் இயக்க’த்தின் பொது செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

‘விஜய் மக்கள் இயக்க’த்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 77 தொகுதிகளில் இத்தகைய வெற்றியைப் பெற்றுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பிரபு என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கதாகும். 

Our Score