சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர். மகன்’ படமும் ஓடிடியில் வெளியாகிறது

சசிகுமாரின் ‘எம்.ஜி.ஆர். மகன்’ படமும் ஓடிடியில் வெளியாகிறது

சசிகுமாரின் நடிப்பில் உருவாகியிருக்கும் எம்.ஜி.ஆர். மகன்’ படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார். இயக்குநர் பொன்ராம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சசிகுமார் நடிப்பில் உருவாகி உள்ள ‘உடன்பிறப்பே’ படமும் நேரடியாக ஓடிடி-யில் இன்று இரவு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score