full screen background image

விஜய்-65 படத்தை இயக்கப் போவது யார்..?

விஜய்-65 படத்தை இயக்கப் போவது யார்..?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவிருக்கும் 65-வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குவதாக இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன கதை விஜய்க்கு பிடிக்காததால், அந்த படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே..!

அந்தச் செய்தி வெளியான நாளிலிருந்தே ‘விஜய்யின் அடுத்த படத்தை பேரரசு இயக்கப் போகிறார்’ என்று சில பத்திரிகைகளும், ‘மகிழ் திருமேனி இயக்கப் போகிறார்’ என்று சில பத்திரிகைகளும், செய்திகள் வெளியிட்டன. இதற்கிடையில் சுந்தர்.சி அந்தப் படத்தை இயக்கப் போவதாகக்கூட செய்திகள் வெளியாகின.

இப்போது விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது இயக்குநர் நெல்சன் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இவர், நயன்தாரா கதாநாயகியாக நடித்த கோலமாவு கோகிலா’ என்ற படத்தை இயக்கியவர்.

மிக விரைவிலேயே இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Our Score