VVR Cinemask நிறுவனத்தின் சார்பில் வெங்கட்ராஜ் தயாரிப்பில் பிரபல சின்னத்திரை இயக்குநர் S.N. சக்திவேல் இயக்கத்தில், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் தீபக் தினகர் நடிக்கும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்.’
இத்திரைப்படத்தின் முதல் கட்டிங் (டீசர்) இன்று அண்ணா பல்கலைக் கழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் வருடாந்திர கலைவிழாவான Techofes நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
“படத் தொகுப்பாளர் ஒரு படத்தில் முதலில் கட் செய்வது டீசருக்காகத்தான். அதை மையமாக வைத்தே டீசருக்கு ‘முதல் கட்டிங்’ என்று பெயர் வைத்தோம். இது அண்ணா பல்கலைக் கழக மாணவர்களை வெகுவாக கவர்ந்தது…” என்றார் படத்தின் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல்.
Our Score