பல வெற்றிப் படங்களை வெளியிட்டுள்ள தி வைப்ரண்ட் மூவீஸ் அடுத்து வெளியிடப் போகும் திரைப்படம் ‘வெண்நிலா வீடு’. “கமர்சியல் படங்களை மட்டுமல்ல, நல்ல, தரமான படங்களையும் வெளியிடுவதுதான் எங்கள் நிறுவனத்தின் நோக்கம்…” என்கிறார்கள் தி வைப்ரண்ட்மூவீஸார்.
தி வைப்ரண்ட் மூவீஸ் ஆகஸ்டில் வெளியிடவிருக்கும் படம் ‘வெண்நிலா வீடு’. இதில் ‘மிர்ச்சி’ செந்தில், விஜயலட்சுமி, மலையாள சினிமாவில் பிரபல நாயகியான சிருந்தா ஆசாப், ‘வழக்கு எண்’ முத்துராமன், பிளாக் பாண்டி, ‘சுப்ரமணியபுரம்’ சித்தன், ‘அவன் இவன்’ ராம்ராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
விவசாயமே இந்தியாவின் முதுகெலும்பு என்று சொன்ன காலம் முடிந்து. தற்போது நடுத்தர வர்க்கம்தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று அறிவிக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. உழைப்பில் தன்னை கரைத்துக்கொண்டு குடும்ப பொருளாதாரத்தையும் உயர்த்தும் இன்றைய நடுத்தர குடும்பங்களின் வாழ்வுதான் இந்த ‘வெண்நிலா வீடு’ படத்தின் கதைக்கரு.
‘வெண்நிலா வீடு’ படம் ரிலிஸாவதற்கு முன்பே அந்தப் படத்திற்காக தயாரிக்கப்பட்ட ‘ஜானி ஜானி வா மாமா’ என்ற பாடல் யு டியூபில் வெளியிடப்பட்டு ஒரு மில்லியன் (பத்து லட்சம்) ரசிகர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. இந்தப் பாடல் இப்போது விநயோகஸ்தர்களின் வேண்டுகோளின்படி படத்திலும் இணைக்கபபட்டுள்ளது. இப்பாடலில் முன்னணி நட்சத்திரங்களான சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், கிருஷ்ணா, பிரேம்ஜி, வெங்கட் பிரபு ஆகியோர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை யாரும் கவனம் செலுத்தாத ஒரு சமூகப் பிரச்சனையை இந்தப் படத்தில் வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதாக படம் பார்த்த தணிக்கை குழுவினர் பாராட்டி இதற்கு ‘யு’ சர்டிபிகேட் வழங்கியுள்ளனர். தமிழக அரசின் வரிச் சலுககை குழுவினரும் படத்தைப் பார்த்து நெகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
தி வைப்ரண்ட் மூவீஸார் படத்தின் முன்னோட்ட காட்சிக்கு பெண்கள் பலரையும் அழைத்து படம் பார்க்க வைத்துள்ளனர். படம் பார்த்த பெண்கள் அனைவருமே தங்களை இந்தப் படம் வெகுவாக பாதித்தது என கூறியுள்ளனர்.
இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த ‘மிர்ச்சி’ செந்தில் என்ற தன் பெயரை மாற்றி ‘செந்தில்குமார்’ என்றே டைட்டிலில் போடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். அதன்படி இந்தப் படத்தில் இருந்தே இந்த மாற்றம் நடந்திருப்பது இந்தப் படத்திற்கும் கிடைத்த பெருமையாகும்.
‘வெண்நிலா வீடு’ திரைப்படம் வெளியான பிறகு தனக்கு பெண்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்து தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை கைப்பற்றுவேன் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் விஜயலட்சுமி.
‘வல்லினம்’ படத்தின் மூலம் தேசிய விருது வாங்கிய எடிட்டர் சாபு ஜோசப் ‘வெண்நிலா வீடு’ படம் தனக்கு இன்னொரு அங்கீகாரத்தினை அளிக்கும் என்கிறார்.
தரமான படங்களை விநியோகம் செய்தவன் மூலம் திரையரங்கு உரிமையாளர்களிடத்தில் ஒரு நல்ல பெயரை பெற்றெடுத்து.. அடுத்தடுத்த படங்களின் மூலம் அந்தப் பெயரை தக்க வைத்துக் கொள்வதுதான் இப்போதைய விநியோக நிறுவனங்களின் தலையாய பணி என்கிறார் தி வைப்ரண்ட் மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கடேஷ்.
இந்தப் படத்தின் டிரெயிலரை பார்த்துவிட்டுத்தான் பல ஊர்களிலிருந்தும் திரையரங்கு உரிமையாளர்கள் இந்தப் படம் பற்றி அக்கறையோடு விசாரித்ததாகவும் கூறுகிறார்.. நிறுவனத்தின் பெயர்தான் படத்தின் தரத்தையும் ஊருக்குச் சொல்லும் என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது என்கிறார்.
வெண்நிலா வீடு டெக்னீஷியன்கள் லிஸ்ட் :
இயக்குநர் : வெற்றி மகாலிங்கம்
ஒளிப்பதிவு : டி. கண்ணன்
இசை : தன்ராஜ் மாணிக்கம்
பாடல்கள் : கபிலன் வைரமுத்து, வெற்றிமகாலிங்கம்
எடிட்டிங் : சாபு ஜோசப் வி.ஜெ
கலை : ஜி. வீரமணி
வசனம் : ஐந்து கோவிலான்.
தயாரிப்பு : ஆதர்ஷ் ஸ்டூடியோ, பி.வி.அருண்
வெளியீடு : தி வைப்ரண்ட்மூவீஸ்.
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்