full screen background image

‘வேலையில்லா பட்டதாரி’யின் ‘தம்’ போஸ்டருக்கு எதிராக போர்க்கொடி..!

‘வேலையில்லா பட்டதாரி’யின் ‘தம்’ போஸ்டருக்கு எதிராக போர்க்கொடி..!

‘வேலையில்லா பட்டதாரி’ படம் வெளி வருவதற்கு முன்பேயே அதில் தனுஷ் ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் காட்சி கொண்ட புகைப்படங்களை பார்த்தே கோபம் கொண்டது புகை பிடிக்காதோர் அமைப்புகள்.. 

சென்சார் போர்டின் விதிமுறைப்படி படத்தில் இக்காட்சி இடம் பெறும் இடத்தில் ‘புகை பிடிப்பது உடலுக்குக் கேடு’ என்னும் கேப்ஷனை காட்டி தப்பித்துவிட்டார் இயக்குநர்.

dhanush-velaiilla pattathaaree-1

ஆனால் இதே புகைப்படத்தை போஸ்டர் டிஸைனாக வெளியிட்டு இது தமிழ்நாடெங்கும் போஸ்டர்களாக ஒட்டப்பட்டதால் மீண்டும் சர்ச்சையாகியிருக்கிறது..

2003-ம் ஆண்டே பொது இடங்களில் சிகரெட் மற்றும் புகையிலை புகைப்பதை ஆதரித்து போஸ்டர்களோ, சுவரொட்டிகளோ, பேனர்களோ வைக்கக் கூடாது என்று சட்டத் திருத்தம் கொண்டு வந்துவிட்டார்களாம். இது தெரியாமல் ‘வேலையில்லா பட்டதாரிகள்’ டீம் இந்த ஸ்டைலான போஸ்டரையே ஊர் முழுக்க ஒட்டியிருக்க களம் இறங்கிவிட்டது  தமிழக புகையிலை எதிர்ப்பு இயக்கம்..

நேற்று தமிழக டிஜிபி ராமானுஜத்தை நேரில் சந்தித்து ‘வேலையில்லா பட்டதாரி’ போஸ்டர்களை அகற்றக் கோரியும்.. விதிமீறலாக அதனை ஒட்டிய தயாரிப்பாளர்கள், டிஸைன் செய்து வெளியிட்ட இயக்குநர், நடிகர் தனுஷ் ஆகியோர் மீது 2003-ம் வருடத்திய புகையிலை தடுப்புச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்களாம்..

புகாரை பெற்றுக் கொண்ட டிஜிபி ராமானுஜம் இதை விசாரித்து கடும் நடவடிக்கை எடுப்பதா உறுதியளித்துள்ளாராம்.

ஓடுற படத்துக்கு திரும்பத் திரும்ப விளம்பரம் கொடுத்து ஓட வைக்குறாங்கப்பா..!

Our Score