full screen background image

சிம்பு படத்தில் இருந்து வெங்கட் பிரபு விலகல்..!

சிம்பு படத்தில் இருந்து வெங்கட் பிரபு விலகல்..!

வாராவாரம் தமிழ்ச் சினிமாவுலகத்தில் லைம் லைட்டுக்கு திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கிறார் சிம்பு.

இந்த வாரத்திய சிம்பு சம்பந்தமான செய்தி என்னவெனில், அவரை வைத்து அடுத்தப் படத்தை இயக்கப் போவதாக இருந்த வெங்கட் பிரபு வேலைப் பளு காரணமாக அந்தப் படத்தை இயக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதனால் வேறு இயக்குநர் தேடுகிறார்கள் என்பதுதான்.

இந்தப் படம் டி.ராஜேந்தர் சமீபத்தில் துவக்கிய ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்’ என்ற சங்கத்தின் நிதிக்காக சிம்பு நடிக்கும் படமாகும். தேர்தலுக்கு முன்பாகவே இந்தத் திட்டம் தீட்டப்பட்டு தயாராக இருந்தது.

டி.ராஜேந்தர் சங்கத்தை ஆரம்பிப்பதாகச் சொன்னவுடன் இந்தப் புதிய படத்திற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன. முதலில் ‘மாநாடு’ படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்தை வெங்கட் பிரபுவே இயக்கவிருப்பதாகச் சொல்லியிருந்தார்கள்.

ஆனால், இப்போது இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழலில் இருக்கும் ‘மாநாடு’ படத்தை முடித்துவிட்டு அதன் போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகளில் மூழ்கவிருப்பதால் தனக்கு நேரம் இருக்காது என்பதை வெங்கட் பிரபுவே சம்பந்தப்பட்டவர்களிடத்தில் சொல்லிவிட்டாராம்.

எனவே, வெங்கட் பிரபுவை கழற்றிவிட்டு புதிய இயக்குநரை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார் டி.ராஜேந்தர்.

அதோடு, அந்தப் படத்திற்காக ஒரு நல்ல கதையையும் தேடுகிறார் டி.ராஜேந்தர். இந்தக் கதை கேட்கும் படலத்தில் சிம்புவுக்காக லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திரபோஸும் கதைக் கேட்டு வருகிறாராம்.

சிம்புவுக்கேற்ற கதையை வைத்திருக்கும் இயக்குநர்கள் விரைந்து செயல்பட்டால் வாய்ப்பு கிடைக்கலாம்..!

Our Score