ஜெய், ஆண்ட்ரியா காதலிக்கும் ‘வலியவன்’..!

ஜெய், ஆண்ட்ரியா காதலிக்கும் ‘வலியவன்’..!

S.K. ஸ்டியோஸ் சார்பில் K.N.சம்பத் தயாரிப்பில் நீண்ட பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் ‘வலியவன்’.

இதில் கதாநாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் தயாராகும் இப்படத்தை ஜெய் மற்றும் ஷர்வானந்த் நடித்த ‘எங்கேயும் எப்போதும்’, விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இயக்குகிறார்.

மென்மையான காதலை மையமாகக் கொண்ட இத்திரைப்படம், அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமான முறையில் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து டெல்லியில் நடைபெற்றது. மேலும் படத்தின் முக்கிய காட்சிகள் ஹரித்துவார் மற்றும் குளுமணாலியில் படமாக்கப்படவுள்ளது.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சரவணன்

தயாரிப்பு – KM. சம்பத்

ஓளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணா

இசை – டி.இமான்

கலை – ராஜா மோகன்

படத்தொகுப்பு – சுபாரக்

பாடல்கள் – நா.முத்துக்குமார்

நடனம் – பிருந்தா

சண்டை பயிற்சி – ஸ்டண்ட் செல்வா

தயாரிப்பு மேற்பார்வை – எம். காசிலிங்கம்

Our Score