மணல் கொள்ளையை அம்பலப்படுத்த வரும் ‘வீராபுரம்’ திரைப்படம்

மணல் கொள்ளையை அம்பலப்படுத்த வரும் ‘வீராபுரம்’ திரைப்படம்

ஸ்ரீவைசாலி மூவி மேக்கர்ஸ் சார்பில் குணசேகரன் தயாரிப்பில் சுந்தர்ராஜன் மற்றும் கண்ணியப்பன் இணைத் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் செந்தில்குமார் இயக்கி வரும் படம் ‘வீராபுரம்’.

இப்படத்தின் நாயகனாக ‘அங்காடி தெரு’ புகழ் மகேஷ் நடிக்கிறார். நாயகியாக ‘உறுதி கொள்’ படத்தில் நடித்திருக்கும் மேகனா நடிக்கிறார்.

ஒளிப்பதிவு - பிரேம்குமார், இசை - ரிதேஷ் & ஸ்ரீதர், படத் தொகுப்பு – கணேஷ் குமார், சண்டை பயிற்சி - எஸ்.ஆர்.முருகன், எழுத்து, இயக்கம் – செந்தில்குமார்.

இதுவரையிலும் நடித்திராத ஒரு புதுமையான கதாபத்திரத்தில் இந்தப் படத்தின் ஹீரோவான மகேஷ் நடித்து வருகிறார், "இப்படத்திற்க்குப் பிறகு மகேஷ் மிகச் சிறந்த ஆக்சன் ஹீரோவாக வலம் வருவார் எனவும் ‘வீராபுரம் மகேஷ்’ என்று அழைக்கப்படுவார்..." என்றும் இயக்குநர் செந்தில்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மணல் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் ஒரு உண்மைச் சம்பவ கதையாகும்.  தமிழ் சினிமாவில் வழக்கமாக சொல்லப்படும் காதல் கதை அல்லாது இப்படத்தில் ஒரு சமுதாய பிரசச்சனையை சொல்ல விரும்பிய இயக்குநர் மணல் கொள்ளையால் நடந்த ஒரு உருக்கமான உண்மைச் சம்பவத்தை மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடந்துள்ளது.  தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு செங்கல்பட்டு அருகே நடந்து வருகிறது.