full screen background image

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘கூத்தன்’ படத்தின் அறிமுக பாடல். 

விஜய் சேதுபதி வெளியிட்ட ‘கூத்தன்’ படத்தின் அறிமுக பாடல். 

தயாரிப்பாளர்  நீல்கிரீஸ்  முருகன்  அவர்களின்  நீல்கிரீஸ்  ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனத்தின் தயாரிப்பில்  உருவாகியிருக்கும்  புத்தம் புதிய  திரைப்படம்  ‘கூத்தன்’.

சினிமாவை  பின்னணியாக  கொண்டு  இந்தப் படம் உருவாகியுள்ளது. சினிமாவில்  நடிகர்கள்  பின்னால்  நடனமாடும்  ஜீனியர் ஆர்ட்டிஸ்ட்களின் வாழ்வியலை  மையமாக  கொண்டு உருவாகியுள்ள  இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் A.L.வெங்கி. 

படத்தில் அறிமுக  நாயகன்  ராஜ்குமாருடன்  அறிமுக  நாயகிகளான ஸ்ரிஜிதா,  சோனால்,  கீரா  ஆகியோர்  நடித்துள்ளனர். 

இவர்களுடன்  நாகேந்திர  பிரசாத்,  விஜய்  டிவி  முல்லை,  கோதண்டம், இயக்குநர் பாக்யராஜ்,  ஊர்வசி,  மனோபாலா,  ஜீனியர் பாலையா,  கவிதாலயா கிருஷ்ணன்,  ஶ்ரீரஞ்சனி,  பரத்  கல்யாண்,  ராம்கி,  கலா மாஸ்டர்  என்று மிகப் பெரிய பட்டாளமே நடித்திருக்கிறார்கள். 

இசை – பாலாஜி,  ஒளிப்பதிவு – மாடசாமி, படத் தொகுப்பு – பீட்டர்  பாபியா,  கலை  இயக்கம் – சி.ஜி.ஆனந்த்,  நடன இயக்கம் -அசோக்  ராஜா, சுரேஷ்,  நிர்வாக  தயாரிப்பு – மனோஜ் கிருஷ்ணா.

7H7A1445 

இந்தப் படத்தின்  ஃபர்ஸ்ட்  லுக்கை  சில நாட்களுக்கு முன்பு நடிகர்  பிரபு வெளியிட்டு படக் குழுவினரை வாழ்த்தினார்.

இந்நிலையில் ‘கூத்தன்’ படத்தின் அறிமுகப் பாடலை   நடிகர்  விஜய் சேதுபதி  நேற்று வெளியிட்டார்.  தனது  அலுவலகத்தில் நடந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர்  நீல்கிரீஸ்  முருகன்,  அறிமுக  நாயகன்  ராஜ்குமார், இசையமைப்பாளர்  பாலாஜி, பாடகர்  வேல்முருகன்,  நிர்வாக  தயாரிப்பாளர் மனோஜ்  கிருஷ்ணா  ஆகியோர் முன்னிலையில் இந்த அறிமுகப் பாடலை விஜய் சேதுபதி வெளியிட்டு சிறப்பித்தார்.

படத்தின் கதையையும்  ஃபர்ஸ்ட்  லுக்,  சிங்கிள்  ஆகியவற்றை  பார்த்த  விஜய் சேதுபதி மிகவும்  கவரப்பட்டு  படக் குழுவை  பாராட்டினார்.  அறிமுக  நாயகன் ராஜ்குமாரின்  நடிப்பை  பாராட்டியவர்.  “இந்தப் பாட்டில் டான்ஸ்  ஆடியது நீங்களா…?”  என்று கேட்டு  ஆச்சர்யப்பட்டார்.  “அட்டகாசமாக  ஆடியுள்ளீர்கள். இன்னும் நிறைய கற்றுக் கொள்ளுங்கள்.  எவ்வளவு  கற்றாலும்  சினிமாவிற்கு  பத்தாது.  பல  நல்ல கதைகளை  தேர்ந்தெடுத்து  நடியுங்கள்.  சிறப்பாக வருவீர்கள்..” எனவும் வாழ்த்தினார். 

மேலும் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ‘கூத்தன்’ படத்தின் அறிமுகப் பாடலான ‘கூத்தனம்மா கூத்தன்; கூத்தனம்மா கூத்தன்’ பாடலை  அறிமுகம் செய்து படக் குழுவினரை பெருமைப்படுத்தினார் விஜய் சேதுபதி.  பாலாஜி இசையில்  வேல்முருகன்  பாடியுள்ள இந்தப் பாடல்  அனைவரையும்  கவரும் வகையில்  உள்ளதாகவும்  கூறினார். 

‘கூத்தன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Our Score