தீபாவளி தினத்தில் தூங்காவனத்துடன் மோதும் வேதாளம்..!

தீபாவளி தினத்தில் தூங்காவனத்துடன் மோதும் வேதாளம்..!

தல அஜீத்தின் 'வேதாளம்' படத்திற்கு சென்சாரில் 'யு' சர்டிபிகேட் கிடைத்துள்ளதாம்.

ஒரு கட் கூட சொல்லாமல் இந்த சான்றிதழ் கிடைத்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் சொல்கிறது.

'வேதாளம்' படத்தில் ஸ்ருதிஹாசன் அஜீத்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 'சிறுத்தை' சிவா இயக்கியிருக்கிறார். இந்தப் படம் வரும் தீபாவளி தினமான நவம்பர் 10-ம் தேதியன்று வெளியாகவுள்ளது.

தீபாவளிக்கு படம் ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்று தல அஜீத் விருப்பப்பட, அதற்காகவே பம்பரமாக சுழன்று வேலை செய்து படத்தினை முடித்துக் கொடுத்துள்ளார் இயக்குநர் சிவா.

அதேபோல் காலில் அடிபட்ட போதிலும்  அந்த வலியுடனேயே நடித்துக் கொடுத்தாராம் அஜீத்.. 

ஆக.. 'தூங்காவன'த்துடன் மோத தயாராகிவிட்டது 'வேதாளம்'..!