full screen background image

இதுவரைக்கும் சொல்லப்படாத கதையில் உருவாகியிருக்கும் ‘வட்டார வழக்கு’ திரைப்படம்!

இதுவரைக்கும் சொல்லப்படாத கதையில் உருவாகியிருக்கும் ‘வட்டார வழக்கு’ திரைப்படம்!

பொதுவாக பிராந்தியத்தை சார்ந்த படங்களும், வட்டாரத்தை சார்ந்த படங்களும், அதன் வட்டார மொழிகளும் வெகு ஜனங்களை சேரும். அதன் மூலம் பெரும் வெற்றி பெறும் என்பது திரை உலகத்தினுடைய நம்பிக்கை.

இதன் சான்றாக பல திரைப்படங்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் டிசம்பர் 29-ம் தேதி வெளியாக உள்ள ‘வட்டார வழக்கு’ என்ற திரைப்படம் இத்தகைய கதையம்சம் மற்றும் கள அம்சம் கொண்ட படமாகும்.

இந்தப் படத்தை மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் K.கந்தசாமி, K.கணேசன் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, விஜய் சத்யா, பருத்திவீரன் வெங்கடேஷ், சுப்ரமணியபுரம் விசித்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரைக்கதை மற்றும் இயக்கம் – கண்ணுச்சாமி ராமச்சந்திரன், ஒளிப்பதிவு – ‘மூடர் கூடம்’ டோனி ஷார்ட், சுரேஷ் மண்ணியன், படத் தொகுப்பு – வெங்கட்ராஜன், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.

மதுரைக்கு மேற்கேயுள்ள ஒரு கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம்தான் இத்திரைப்படம்.

பகை, காதல், கோபம், வெறுப்பு, கொலை, வழக்கு என்ற பல பரிமாணங்கள் அடங்கிய இத்திரைப்படத்திற்கு ‘இசைஞானி: இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இத்தனை ஆண்டு கால தமிழ் சினிமாவில் இடம் பெற்ற காதல் காட்சிகள்போல் இல்லாமல், காதல் வசனங்கள் இல்லாமல்…

இவ்வளவு ஏன்? காதலர்கள் நேரில் சந்திக்காத சூழலிலும் அவர்களிடையே மலர்ந்த ஒரு புதுவிதமான காதல் உணர்வை இப்படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன்.

படத்தில் ஒரு கால் மணி நேர பகுதி, படத்தின் விறுவிறுப்பான காட்சிகள் அடங்கிய பல திருப்புமுனைகளை இத்திரைப்படத்தில் நிகழ்த்துகிறது.

1985-ம் ஆண்டில் நடக்கின்ற இத்திரைக்கதையில், 1962-ஆம் வருடத்தில் நடப்பது போல் ஒரு குட்டி ஃபிளாஷ்பேக் எடுக்க ஒரு இடம் தேவைப்பட்டது.

அப்போது மதுரை அருகேயுள்ள கல்லுப்பட்டி என்ற கிராமம் எத்தனை ஆண்டுகள் ஆகியும் எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் அதே பழமையுடன் இருப்பது தெரிய வந்தது. அக்கிராமத்தில்தான் இத்திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வரும் டிசம்பர் 29-ம் தேதி இத்திரைப்படம் சக்தி ஃபிலிம் சிக்நேச்சர் நிறுவனத்தால் பெருமையுடன் உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது.

Our Score