GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் DR.S.கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் பிரம்மாண்ட செலவில் தயாரிக்கும் படம் ‘குற்றம் புதிது’.
இந்தப் படத்தில் கதாநாயகனாக தருண் நடிக்கிறார். செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார். மற்றும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், டார்லிங் நிவேதா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ரஜித்,கிரிஷ் பாடல் வரி எழுத, ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் B.கிருபா இசையமைக்கிறார். கமலக்கண்ணன் படத் தொகுப்பை கவனிக்கிறார். கதைக் கரு – சந்திரன், நடன இயக்குநர் – வரதா, உடைகள் வடிவமைப்பு – கெசியா, உடைகள் – சம்பத், ஒப்பனை – ஏர்போர்ட் ராஜா, பாடகர்கள் – அனந்து, ரஜித், புகைப்படங்கள் – எஸ்.சக்திப்பிரியன், விளம்பர வடிவமைப்பு – தினேஷ் குமார், பத்திரிக்கை தொடர்பு – நித்தீஸ் ஸ்ரீராம், மணவை புவன். அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இவர்களின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்த படம் கற்பனைக்கு அப்பாற்பட்டதை எதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கிறது.
இந்த படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் கே.பாக்யராஜ் இந்தப் படத்தினைத் துவக்கி வைத்தார்.
இமாதம் 23-ம் தேதி தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடியவுள்ளது.