full screen background image

பிரபு – வெற்றி – கிருஷ்ண பிரியா நடிக்கும் ‘ஆண் மகன்’ திரைப்படம்..!

பிரபு – வெற்றி – கிருஷ்ண பிரியா நடிக்கும் ‘ஆண் மகன்’ திரைப்படம்..!

கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் K.M.சபி மற்றும் பாரூக் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்க கிராமத்து கதைக் களத்தில், நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக உருவாகும் திரைப்படம் ‘ஆண் மகன்’..!

இந்தப் படத்தில் ‘8 தோட்டாக்கள்’ வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேரளத்து பைங்கிளி கிருஷ்ண பிரியா அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன், தங்கதுரை மற்றும் பலர் நடிக்கின்றனர்,

மேலும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் துள்ளல் கலந்த அப்பாவாக ‘இளைய திலகம்’ பிரபு நடிக்கிறார்.

கிராமப்புற காட்சிகளை கண்ணுக்கு குளுமையாக ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி படம் பிடித்துள்ளார்.

நாடி, நரம்புகளை நடனமாட வைக்கும் துள்ளல் இசையோடு நவ்பல் ராஜா தமிழ் திரை உலகுக்கு இந்தப் படத்தின் மூலமாக புதிய இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்..!

இந்த ஆண்மகன் படத்தின் அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுத, அடுக்குமொழி நாயகர் டி.இராஜேந்தர் இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடுவது இப்படத்தின் தனிச் சிறப்பம்சமாகும்..!

வெற்றிப் பட இயக்குநர்களான வசந்த் சாய் மற்றும் நந்தா பெரியசாமியுடன் பணி புரிந்த அறிமுக இயக்குநரான மகாகந்தன் இந்தப் படத்தை  இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம், தூத்துக்குடி, மரக்காணம், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது!

இந்தாண்டில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

Our Score