‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா

‘வணிகன்’ படத்தின் இசையை வாங்கி வெளியிடும் யுவன் சங்கர் ராஜா

ஒரு படத்திற்கான அங்கீகாரம் என்பது மக்களால் பெரிதாக மதிக்கப்படும் பிரலபங்கள் அந்தப் படத்தை எதாவது ஒரு முறையில் அங்கீகரிக்கும்போதுதான் உண்மையாகவே கிடைத்தது போலாகும். அப்படியொரு பெருமையைப் பெற்றுள்ளது ‘வணிகம்’ திரைப்படம்.

இந்த ‘வணிகன்’ என்ற படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி அப்படத்தின் மீதான நம்பிக்கையை கூட்டி இருக்கிறார் பிரபல இசை அமைப்பாளரான யுவன்சங்கர் ராஜா. இந்தப் படத்திற்கு டி.ஆர்.சுரேஷ்குமார், புவனேஷ் செல்வநேசன் என்ற இரட்டை இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்காத படத்தின் இசையை தனது இசை வெளியீட்டு நிறுவனத்திற்காக வாங்கியது இதுவே முதல் முறையாகும்.

FESTUS PRODUCTIONS என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் செந்தில் விஜயகுமார் இந்த ‘வணிகன்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். 

‘நேரம்’, ‘பிரேமம்’, வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆனந்த் நாக் இந்தப் படத்தில் கதாநாயகனாக  நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கும் நக்ஷத்திரா நாகேஷ் இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

மேலும் முக்கிய கதாப்பாத்திரங்களில் சார்லி, ராஜ்மோகன், கிருத்திகா பாலா, மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இசை  -  சுரேஷ்குமார்.T.R. – புவனேஷ் செல்வநேசன், ஒளிப்பதிவு - அகஸ்டின் இளையராஜா, பாடல்கள்  - மோகன்ராஜன், படத் தொகுப்பு  - பரமேஷ் கிருஷ்ணா, தயாரிப்பு  - செந்தில் விஜயகுமார், எழுத்து, இயக்கம் – வி.பி.டேனியல்.

594A9397

இயக்குநர் டேனியல் இதற்கு முன்  இரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளார். இது இவரது முதல் படமாகும்.

‘வணிகன்’ படம் பற்றி இயக்குநர் வி.பி.டேனியல் பேசும்போது, "இது ஒரு எதார்த்தமான திரில்லர் படம். தற்போது சமூகத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை இதில் கையாண்டிருக்கிறோம்.

இந்தப் படத்தின் பாடல்களை கேட்ட பிரபல  இசையமைப்பாளர்  யுவன் சங்கர் ராஜா, இசையமைப்பாளர்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தனது ‘U1 Records’ நிறுவனத்திற்காக எங்களுடைய ‘வணிகன்’ படத்தின்  ஆடியோ உரிமையை வாங்கியிருக்கிறார். அது எங்கள் படக் குழுவினருக்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறோம்.

தவிர, இந்தப் படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், பாடலாசிரியர் மோகன் ராஜன் எழுதிய ‘வாடி முட்ட கண்ணி’ என்ற பாடலைப் பாடியுள்ளார். அந்தப் பாடலை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா வெளியிட்டார். அது தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவிவருகிறது. ‘வணிகன்’ படம் விரைவில் வெளியாக உள்ளது..." என்றார்.