‘வணக்கம்டா மாப்ள’ திரைப்படம் சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகிறது..!

‘வணக்கம்டா மாப்ள’ திரைப்படம் சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகிறது..!

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் ‘வணக்கம்டா மாப்ள’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டு தினத்தில் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்துள்ளார். இவர் திகில்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும், டேனி, ஆனந்த்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், பிரகதி, செளந்தர்யா, ரேஷ்மா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சித்தார்த் ரங்கநாதன், இசை – ஜி.வி.பிரகாஷ், பாடல்கள் – சிநேகன், பா.விஜய், சரவெடி சரண், கானா வினோத், கலை இயக்கம் – சுரேஷ் கல்லேனி, படத் தொகுப்பு – ஆஷிஷ் ஜோஸப், நடன  இயக்கம் – தினேஷ், ஸ்டில்ஸ் – ராமசுப்பு, ஆடை வடிவமைப்பு – ஜி.வீரபாபு, வினோத் சுந்தர், நிர்வாகத் தயாரிப்பு – சரவணக்குமார், தயாரிப்பு மேற்பார்வை – செல்வா சண்முகம் – ஏ.கார்த்தி, தயாரிப்பு நிர்வாகம் – ரமீஸ் ராஜா, கிராபிக்ஸ் – அக்ஸா ஸ்டூடியோ, விளம்பர வடிவமைப்பு – டிசைன் பாயிண்ட், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – எம்.பி.கோபி, வி.குரு ரமேஷ்.

சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி இருந்த எம்.ராஜேஷ் இந்த படத்தினை இயக்கி உள்ளார்.

இந்தப் படம் தற்போது வரும் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சன் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே யோகி பாபுவின் நாங்க ரொம்ப பிசி’, ‘மண்டேலா’, விக்ரம் பிரபுவின் ‘புலிக்குத்தி பாண்டி’, சமுத்திரகனியின் ‘ஏலே’ ஆகிய திரைப்படங்கள் நேரடியாக டிவி சேனல்களில் வெளியானது.

Our Score