“எனக்குக் கல்யாணமெல்லாம் இல்லீங்க..” – மறுக்கிறார் நடிகை சுனைனா

“எனக்குக் கல்யாணமெல்லாம் இல்லீங்க..” – மறுக்கிறார் நடிகை சுனைனா

தனக்குத் திருமணமாகப் போவதாக வலம் வரும் செய்திகளெல்லாம் வதந்தியே என்று மறுப்புத் தெரிவித்துள்ளார் நடிகை சுனைனா.

திரைப்பட வாய்ப்புகள் இப்போதுதான் தன்னைத் தேடி வந்து கொண்டிருப்பதால் தற்போதைக்கு தனக்குத் திருமணம் செய்து கொள்ளும் எண்ணமே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து ‘நீர் பறவை’, ‘வம்சம்’, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், நடிப்பு திறன் மிக்கவர் என்று பெயரையும் பெற்றுள்ளார்.

இதனிடையே கடந்த ஆண்டு பொது முடக்கத்திற்கு  முன் வெளியான இவரது நடிப்பில் வெளியான சில்லுக்கருப்பட்டி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் அவர் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என இரு தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றார்.

இதையடுத்து சுனைனா நடித்திருந்த ‘டிரிப்’ திரைப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவர், ‘ராஜ ராஜ சோரா’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழில் பிரபல தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 

இந்த நேரத்தில் சுனைனாவுக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகக் கூறி சில இணையத்தளங்களில் செய்திகள் பரவின. இதை உறுதியாக மறுத்துள்ளார் சுனைனா.

இது குறித்து சுனைனா பேசுகையில் ”கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் என்னைத் தேடி வருகின்றன. பல வகையான கதாபாத்திரங்களும் கிடைத்துள்ளன. மேலும் சில இயக்குநர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது.

இதற்கிடையில் நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகின்றன. இவை அனைத்தும் வந்ததிகள்தான். திருமணம் செய்து கொள்ளும் திட்டம் தற்போது இல்லை.

திரை வாழ்க்கையில்தான் தற்போது நான் எனது முழு கவனத்தையும் செலுத்துகிறேன். எனது திருமணத்தைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு எனது திரைப்படங்களைப் பற்றிப் பேசலாம்..” என்றார் நடிகை சுனைனா.

Our Score