full screen background image

சினிமா வியாபாரத்தில் புதிய வழியைக் கை காட்டும் ‘அசால்ட்’ திரைப்படம்

சினிமா வியாபாரத்தில் புதிய வழியைக் கை காட்டும் ‘அசால்ட்’ திரைப்படம்

‘மத்திய சென்னை’, ‘காட்டுப் பய ஸார் இந்தக் காளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தயாரிப்பாளரும், இயக்குநருமான ஜெய்வந்த் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘அசால்ட்’.

இந்தப் படத்தில் ஜெய்வந்துடன் சோனா, ‘மைனா’ நாகு, ‘களவாணி’ தேவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “மூன்று பெண் தாதாக்களை மையப்படுத்திய கதை இது…” என்கிறார் ஜெய்வந்த்.

“இப்போதெல்லாம் பெரிய ஹீரோக்களின் படங்களே ரிலீஸ் ஆக முடியாமல் தவிக்கின்றன. எவ்வளவு பப்ளிசிட்டி செய்தாலும் தியேட்டருக்கு கூட்டம் வரவில்லை. இந்த நிலையில் இந்தப் படத்தை எப்படி வியாபாரம் செய்வீர்கள்..?” என்று கேட்டதற்கு தயாரிப்பாளர் ஜெய்வந்த் சொன்ன விளக்கம் மிக புதுமையாக இருந்தது.

“உண்மைதான். கொரோனாவுக்குப் பிறகு தமிழ்ச் சினிமா பழைய மாதிரியில்லை. இன்னும் அது முழுமையாக செயல்படத் துவங்கலை. எனவேதான் நாங்க எங்களோட இந்த அசால்ட் திரைப்படத்துல சில நூதனமான வேலைகளைச் செய்திருக்கிறோம்.

இந்த ‘அசால்ட்’ படத்தை ஐந்து மணி நேர புட்டேஜா எடுத்திருக்கிறோம். சினிமாவாக்கூட இதனை இரண்டு பாகங்களாக வெளியிடலாம். வெப் சீரிஸா மாத்தணும்ன்னா எட்டு எபிசோடுகளாக மாற்றலாம்.

எந்த பார்மெட்டில் படம் வியாபாரம் ஆகிறதோ அந்த பார்மெட்டில் இந்த ‘அசால்ட்’ படத்தை ரிலீஸ் செய்வோம். இனிமேல், சினிமாவில் வியாபார களம் இப்படித்தான் இருக்கும்ன்னு நினைக்கிறோம்..” என்றார் தயாரிப்பாளர் ஜெய்வந்த்.

நல்ல ஐடியாவா இருக்கே..!?

Our Score