சந்தானத்தி்ன் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் ஷூட்டிங் முடிவடைந்தது..!

சந்தானத்தி்ன் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் ஷூட்டிங் முடிவடைந்தது..!

என்னடா.. இந்தப் படத்தைப் பத்தி ஒரு நியூஸும் வரக் காணோமேன்னு பார்த்தோம்..! இன்னிக்குத்தான் மீடியாக்கள்ன்னு ஒருத்தங்க இருக்கான்ற நினைப்பு வந்து இந்தச் செய்தியை கும்பகோணத்துல இருந்து ஓலைல எழுதி புறா கால்ல கட்டி அனுப்பி வைச்சிருக்காங்க தயாரிப்பாளர்கள் தரப்பு..! வாங்கப்பா வாங்க.. சந்தானத்தை பிரஸ் மீட்ல சந்திக்கணும்.. அன்னிக்கு கேக்குறோம் கேள்வியை..!!!

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்தது.

படப்பிடிப்பு முடிவடைய இருப்பதால் அதை கொண்டாட நினைத்த பட குழுவினருக்கு இன்னொரு கொண்டாட்டத்துக்கான காரணமும் காத்திருந்த்தாம். மூத்த ஸ்டண்ட் இயக்குனர் விஜயன் மாஸ்டரின் பிறந்த நாள் கொண்டாட்டம்தான் அது.

பட்டு வேட்டி சட்டையில் சந்தானமும், பட்டுப் புடைவையில் கதாநாயகி அஷ்ணா ஜாவேரியும் இந்த விசேஷத்துக்கான உடைகளில் வலம் வந்தனர் . அதிரடி காட்சிகளில் பஞ்ச் அடிக்கும் விஜயனின் பிறந்த நாளை சிரிப்பு சர வெடியில் பஞ்ச் அடிக்கும் சந்தானம் கொண்டாடியதை விஜயன் மாஸ்டர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

காதல் காட்சிகளில் மட்டுமின்றி, அதிரடி சண்டை காட்சிகளில்கூட சோபிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ள சந்தானம் கொண்டாட இதை விட வேறு தருணமோ, வேறு சரியான காரணமோ கிடைக்காது.

Cast
 • Santhanam
 • Ashna Zaveri
 • Nagineedu
 • Mirchi Senthil
 • VTV Ganesh
 • Rajkumaran
Crew
 • Directed by – Srinath
 • Produced by – PVP Cinema 
 • Director of Photography – Shakthi
 • Music – Siddarth Vipin 
 • Lyrics – Madhan Karky, Na.Muthukumar
 • Editor – Saikanth
 • Choreographer – Rajesh Kanna 
 • Stunt – Dilip Subburayan
 • Art Director – A.R.Mohan
Our Score