காதல் பஞ்சாயத்து – திரை முன்னோட்டம்

காதல் பஞ்சாயத்து – திரை முன்னோட்டம்

ஜெகோவா பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசுவா தேவதாஸ் தயாரிக்கும் படம் “காதல் பஞ்சாயத்து’’ கதாநாயகனாக தேவன் நடிக்கிறார்.

கதாநாயகியாக நேகா நடிக்கிறார்.  மற்றும் சிங்கமுத்து, ரோபோசங்கர், வடிவேல் பாலாஜி, வி.எஸ்,ராகவன், ராஜசேகர், ஷர்மிளா, ஷகிலா, டைனோசர் ராஜன், தேவராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு     –      அருள்ராஜ்வர்மன்.

இசை     –    ஜான்சன்

பாடல்கள்     –    ரகுராமன், ஜான்சன், மாணிக்கம்.

கலை    –  கதிர்

நடனம்       –     ஜீவித்

எடிட்டிங்     –     சதீஷ்

ஸ்டண்ட்     – பம்மல் ரவி

நிர்வாகத் தயாரிப்பு   –   P.Y.K. ராஜேஷ்குமார்

தயாரிப்பு      –     J. ஜோஸ்வா தேவதாஸ்

எழுத்து-இயக்கம் – V. கலைசங்கர்.

படம் பற்றி இயக்குனர் கலைசங்கர் கூறும்போது,  “இந்த படத்தில் இடம் பெறும் பாடல் காட்சி ஒன்றை இந்திய எல்லை பகுதியான குல்மார்க் என்ற இடத்தில் படமாகத் திட்டமிட்டோம். அதன்படி நாங்கள் அனைவரும் அங்கே போய் சேர்ந்தோம். அந்த நேரத்தில் அப்சல் குருவை தூக்கில் போட்டதால் பயங்கர கலவரம் ஏற்பட்டு எங்களால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் திரும்பி வந்தோம்.

அதன் பிறகு சகஜ நிலைமைக்கு திரும்பியவுடன் மீண்டும் யூனிட்டை அழைத்துக் கொண்டு அங்கு சென்று படப்பிடிப்பை நடத்தினோம். அங்கே இரண்டு முறை போய் வந்ததில் நிறைய செலவானது. இருந்தும் படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்தது. நாங்கள் படப்பிடிப்பை நடத்திய இடம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவும்  நுழைவு வாயில் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரை பணயம் வைத்து அங்கே எடுக்கப்பட்ட ‘ஒரு முறை சிறு பிழை, தழுவுதே என் சுவாசமே’ என்ற பாடல் காட்சி சிறப்பாக வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. கமர்ஷியல், காதல் படமாக ‘காதல் பஞ்சாயத்து’ உருவாகி உள்ளது..” என்கிறார் இயக்குனர்.

Our Score