full screen background image

10,000 சதுர அடியில் தயாரான ‘வலிமை’ பட போஸ்டர்..!

10,000 சதுர அடியில் தயாரான ‘வலிமை’ பட போஸ்டர்..!

ஜீ-5 ஓடிடி நிறுவனம், அஜித்குமாரின் ‘வலிமை’ படத்தின் போஸ்டரை மிகப் பிரம்மாண்டமான வகையில் 10,000 சதுர அடியில் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வெளியான போஸ்டர்களில் இது உச்சபட்ச சாதனையாகும்.

தமிழ் ஓடிடி இயங்கு தளங்களில் வெற்றியாளராக, தன்னை நிரூபித்துள்ள ஜீ-5 ஓடிடி நிறுவனம், தொடர்ந்து பல மொழிகளில் அருமையான திரைப்படங்களையும் அசல் தொடர்களையும் வழங்கி வருகிறது.

இதன் சந்தாதாரர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய சிறப்பு மிகு படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இப்போது, அஜித் குமாரின் சமீபத்திய ஆக்‌ஷன் அதிரடி திரைப்படமான ‘வலிமை’ படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிளாக் பஸ்டர் பிரீமியர் காட்சியைக் காணும் நேரம் வந்துவிட்டது.

உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்ற பிறகு, ‘வலிமை’ திரைப்படம் மார்ச் 25-ம் தேதி முதல் உலகம் முழுவதும் ஜீ-5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

‘வலிமை’ படம் ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாவதை தொடர்ந்து, நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு செய்யும் வகையில் வலிமை படத்திற்காக 10,000 சதுர அடியில் மிகப் பெரிய போஸ்டரை ஜீ-5 ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக கருதப்படும் வலிமை படத்தில் அஜித் குமார் ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூனாகவும், ஹுமா குரேஷி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

H.வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து பேவியூ ப்ராஜெக்ட் எல் எல் பி சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரு அருமையான போலீஸ் கதையோடு, வலுவான ஆக்‌ஷன் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் இந்தப் படத்தை ஒரு முழுமையான குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக மாற்றியுள்ளது.

இப்படத்தில் நடிகர் அஜீத் குமாரின் அசத்தலான திரை ஆளுமை மற்றும் நடிகர் கார்த்திகேயாவின் சாத்தானிய அவதாரம்.. இவையிரண்டும் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு வரவழைத்தது.

12 மொழிகளில் 3,500 திரைப்படங்கள், 500+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 4,000+ இசை வீடியோக்கள், 35+ மேடை நாடகங்கள் மற்றும் 90+ லைவ் டிவி சேனல்கள், உடன் ஜீ5 தளமானது உலகம் முழுவதும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்கத்தை வழங்குகிறது. இப்போது, ஜீ-5 ஓடிடி தளத்தின் ஆண்டு சந்தா ரூ. 599  மட்டுமே!

Our Score