full screen background image

‘வலிமை’ படத்தின் படத் தொகுப்பாளர் மாற்றப்பட்டார்..!

‘வலிமை’ படத்தின் படத் தொகுப்பாளர் மாற்றப்பட்டார்..!

தற்போது வலிமை’ படத்தின் அனைத்து டாக்கி போர்ஷன்களும் படமாக்கப்பட்டுவிட்டன. இவற்றை படத் தொகுப்பு செய்யும் வேலைகள் துவங்கிவிட்டதாம்.

இந்தப் படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் படத் தொகுப்பாளர் மாற்றப்பட்டிருப்பதகாகத் தெரிகிறது. முன்பு கதிர் படத் தொகுப்பு செய்வதாக இருந்தது. ஆனால் இப்போது ‘ஜாக்பாட்’ மற்றும் ‘சங்கு சக்கரம்’ ஆகிய படங்களுக்கு படத் தொகுப்பு செய்திருக்கும் விஜய் வேலுக்குட்டி என்பவர்தான் ‘வலிமை’ படத்தின் புதிய படத் தொகுப்பாளராம்.

தற்போது எடுக்கப்பட்டவரையிலான படத்திற்கான படத் தொகுப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் ஏப்ரலுக்குள் முடிந்துவிடும். அதன் பிறகு எடுக்கப்பட்ட சில சண்டை காட்சிகளை மட்டும் ஸ்பெயின் அல்லது மொராக்கோ நாட்டிற்குச் சென்று படமாக்கப்படவுள்ளார்கள். இது ஏப்ரலில் நடக்க வாய்ப்புண்டு என்கிறது ‘வலிமை’ படக் குழு.

Our Score