அஜீத் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் செய்தி ஒன்றை போனி கபூர் சமீபத்தில் வெளியிட்டார்.
இந்த ‘வலிமை’ படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீ்ட்டு உரிமையை யாருக்குக் கொடுத்திருக்கிறோம் என்பதை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூரே சொல்லிவிட்டார்.
‘ரோமியா பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் ராகுலும், மதுரை ‘கோபுரம் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் அன்புச்செழியனும் இணைந்து இந்தப் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமையை வாங்கியிருக்கிறார்களாம்.
இனிமேல் இதனை ஏரியா வாரியாக பிரித்துப் பிரித்து விற்பனை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் ஒட்டு மொத்த தமிழ்நாடு தியேட்டர் உரிமையின் விலை 60 கோடி என்கிறார்கள். கூடுதலாக 20 கோடி லாபம் வைத்து 80 கோடிக்கு ஒட்டு மொத்தமாக ‘வலிமை’ படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமை விற்கப்படலாம் என்று தெரிகிறது.
அஜீத்தின் முந்தைய படமான ‘நேர் கொண்ட பார்வை’ படத்தையும் இதே ராகுல்தான் தமிழகத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.