தாய்ப் பாசத்தில் ஒலிக்கும் ‘வலிமை’ படத்தின் 2-வது பாடலும் வெளியானது

தாய்ப் பாசத்தில் ஒலிக்கும் ‘வலிமை’ படத்தின் 2-வது பாடலும் வெளியானது

நேர் கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து H.வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை’.

இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பாவெல் நவகீதன், யோகி பாபு மற்றும் அச்யுத் குமார் ஆகியோரும் நடித்துள்ளனர். 

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் 2022 பொங்கல் பண்டிகை தினத்தன்று படம் வெளியாகவுள்ளது.  

இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் இப்படம் குறித்த அப்டேட்டை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். 

மேலும் யுவன் ஷங்கர் ராஜா – அஜித் கூட்டணியில் பில்லா’ மற்றும் ‘மங்காத்தா’ போன்ற படங்களில் பாடல்கள் நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து இப்படத்திலும் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வந்தது.

இதனையடுத்து சமீபத்தில் ‘வலிமை படத்தின் முதல் சிங்கிளாக ‘நாங்க வேற மாறி’ என ‘தொடங்கும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

அதன் பின்னர் அடுத்த அப்டேட்டாக சில தினங்களுக்கு முன்னர் இரண்டாம் சிங்கிள் குறித்த ப்ரோமோ வெளியானது.  அதன்படி நேற்று மாலை 6:30 மணிக்கு இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியானது.

தாய்ப் பாசத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் பாடல். “நான் பார்த்த முதல் முகம் நீ..! நான் கேட்ட முதல் குரல் நீ…!” என்று துவங்குகிறது. 

பிரசவித்தது முதல் குழந்தையை பெற்றெடுத்து, குழந்தை வளரும் ஒவ்வொரு நிலையிலும் தாய் எப்படி அரவணைக்கிறாள் என்பதை கூறும் வித்தாக இப்பாடல் அமைந்துள்ளது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுத, இந்த பாடலை  பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.  இந்த பாடலும் தற்போது அஜீத்தின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Our Score