‘வைகைப் புயல்’ வடிவேலு மீண்டும் நடிக்க வருவாரா என்று அவரது ரசிகர்கள் ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களை சந்தோஷப்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
வடிவேலுவின் நடிப்பு கேரியரில் ‘தலைநகரம்’, ‘மருதமலை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் முக்கியமானவை. அவருடைய நகைச்சுவைக்காகவே இந்தப் படங்கள் ஓடின என்றே சொல்லலாம். இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் இந்தப் படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் ஓடாத நாட்களே இல்லை.
இந்த இரண்டு படங்களின் இயக்குநரான இயக்குநர் சுராஜ் தான் அடுத்து இயக்கவிருக்கும் புதிய படத்தில் வடிவேலுவை புக் செய்திருக்கிறாராம். படத்தின் பெயர் ‘நாய் சேகர்’.
படத்தின் தலைப்பைப் பார்க்கும்போதே இந்தப் படம் காமெடி படம்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளலாம்.
இதற்கான முறையான அறிவிப்பு வெகு சீக்கிரம் வரலாம். இடையில் வடிவேலு மீதான தடையை நீக்கும் வேலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்துள்ள புதிய நிர்வாகிகளுடன் தீவிரமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகச் சொல்கிறார்கள்.
இதனால்தான் இயக்குநர் சுராஜ் தைரியமாக இந்த விஷயத்தை வெளியில் கசிய விட்டிருக்கிறார். இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாங்க வடிவேலு.. காத்திருக்கிறோம்..!