full screen background image

‘வடக்கன்’ படத்திற்காக பாடல் பாடிய இசையமைப்பாளர் தேவா..!

‘வடக்கன்’ படத்திற்காக பாடல் பாடிய இசையமைப்பாளர் தேவா..!

‘எம்டன் மகன்’, ‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘பாண்டிய நாடு’ உள்ளிட்ட பல படங்களின் வசனத்தை எழுதிய, திரைக்கதை அமைப்பில் பங்களித்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி முதல்முறையாக எழுதி இயக்கும் திரைப்படம் `வடக்கன்’.

புத்தகப் பதிப்புத் துறையில் புகழ் பெற்று விளங்கும், முன்னணிப் பதிப்பாளரான ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ வேடியப்பன் இந்த வடக்கன் திரைப்படத்தை தயாரித்து வழங்குகிறார். இது இவர் தயாரிக்கும் முதல் படமாகும்.

இந்தப் படத்தில் கூத்துப்பட்டறை மாணவரான தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் குங்குமராஜ் கதாநாயகனாகவும், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் கண்டுபிடிப்பான வைரமாலா கதாநாயகியாகவும், இன்னும் பல புதுமுகங்களும் நடித்துள்ளனர்.

‘அழகர்சாமியின் குதிரை’, ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘தரமணி’, ‘பேரன்பு’, ‘கர்ணன்’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’, ‘மாமன்னன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் முன்னணி ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் இந்த ‘வடக்கன்’ திரைப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கர்நாடக இசைத் துறையில் தனி இடத்தைப் பிடித்தவரும், இந்துஸ்தானி, வெஸ்டர்ன், வெஸ்டர்ன் க்ளாஸிக் முதலிய பல்வேறு இசைப் பிரிவுகளை கற்றுத் தேர்ந்தவரும், தனிப் பாடல்கள் மற்றும் இசை ஆல்பங்களை வெளியிட்டு பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றவருமான S.J.ஜனனி ‘வடக்கன் ‘ திரைப்படத்துக்கு இசை அமைக்கிறார்.

படத்தில் பிரதானமாக இடம் பெறும் முக்கியமானதொரு பாடலை கவிஞர் ரமேஷ் வைத்யா எழுத, ‘தேனிசைத் தென்றல்’ தேவா அந்தப் பாடலை பாடியிருக்கிறார்.

பாடலைப் பாடி முடித்ததும் அந்தக் காட்சியின் ஆன்மாவைக் கடத்தும் இசையையும், அதற்கு ஒத்திசைந்து உயிரூட்டும் பாடல் வரிகளையும் உருவாக்கிய இசையமைப்பாளர் ஜனனியையும், கவிஞர் ரமேஷ் வைத்யாவையும் மனதாரப் பாராட்டினார் தேவா.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளில், பெருநகரம் துவங்கி குக்கிராமங்கள்வரை வட இந்தியத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இன்றைய சூழலைப் பின்னணியாகக் கொண்டு நிகழும் ஒரு உணர்வு மயமான, நகைச்சுவை கலந்த, பொழுது போக்குத் திரைப்படமாக ‘வடக்கன்’ உருவாகியுள்ளது.

சிறந்ததொரு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த ‘வடக்கன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும். இசை வெளியீட்டுக்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.

Our Score