full screen background image

தனுஷ்-சம்யுக்தா மேனன் நடிக்கும் ‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ்-சம்யுக்தா மேனன் நடிக்கும் ‘வாத்தி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல தயாரிப்பாளரான ‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனத்தின் சூர்யதேவர நாக வம்சி, ‘ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ நிறுவனத்தின் சாய் சௌஜன்யாவுடன் இணைந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்துள்ள படம் ‘வாத்தி’.

இந்தப் படத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரகனி, தொட்டபள்ளி மது, நரா ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சரா, ‘ஆடுகளம்’ நரேன், இளவரசு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி, பிரவீனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து மற்றும் இயக்கம் – வெங்கி அட்லுரி, தயாரிப்பு – நாக வம்சி எஸ், சாய் சௌஜன்யா, படத் தொகுப்பாளர் – நவீன் நூலி, ஒளிப்பதிவாளர் – ஜே.யுவராஜ், இசை –  ஜி.வி.பிரகாஷ் குமார், தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவிநாசி கொள்ளா, சண்டை பயிற்சி இயக்கம் – வெங்கட், தயாரிப்பு நிறுவனம் – சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் போர் சினிமாஸ், வழங்குபவர் – ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ், பத்திரிகை தொடர்பு – ரியாஸ் K.அஹமத்.

இந்த ‘வாத்தி’ படத்தின் படப்பிடிப்பானது முற்றிலும் முடிவடைந்து, தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்தப் படம் வரும்  டிசம்பர் 2-ம் தேதி தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர்.

அந்த பட வெியீட்டு அறிவிப்பின் படத்தின் புகைப்படம் தாங்கிய போஸ்டருடன் வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டரில் நாயகன் தனுஷ் ஒரு மேஜையில் அமர்ந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் தன் விரலை மேல் நோக்கி உயர்த்தி, படத்தின் வெளியீட்டு  நாளை காட்டுவது போல் இருந்தது.

தனுஷின் பின்புறம் உள்ள கரும் பலகையில், பல்வேறு கணித சமன்பாடுகள் மற்றும் அவரது அருகில் ஒரு புத்தகமும் வைக்கப்பட்டுள்ளது. தனுஷ் தன்னுடைய சாதாரண தோற்றத்தில் மிக எளிமையாக காணப்படுகிறார்.

“தேதியை குறித்துக் கொள்ளுங்கள்… வாத்தி வருகிறார் பாடம் எடுக்க.. 2022 டிசம்பர் 2-ம் தேதி முதல்” என்று அந்த போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த திரைப்படம்.

Our Score