full screen background image

நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’..!

நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் ‘வாங்கண்ணா வணக்கங்கண்ணா’..!

Rock & Role production &  A.P.Production ஆகிய நிறுவனங்களின் சார்பில் யாஷ்மின் பேகம் மற்றும் மணிமேகலை லட்சுமணன் இருவரும் இணைத்து தயாரிக்கும் புதிய திரைப்படம் வாங்கண்ண வணக்கங்கண்ணா’.

இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். சுந்தர் மஹா ஸ்ரீ, விஜயலட்சுமி இருவரும் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். சன்னி பாபு ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றும் பல பிரபலமான நடிகர், நடிகைகளும் நடிக்கின்றனர்.

எழுத்து, இயக்கம் – ராஜ் கண்ணாயிரம், கதை, திரைக்கதை, வசனம் – சுந்தர் மஹாஸ்ரீ, ஒளிப்பதிவு – தீபக் தமிழ்ச்செல்வன், படத்தொகுப்பு – ரமேஷ் மணி, இசை – ஜோஸப் சந்திரசேகர், ஒலிப்பதிவு – சதீஷ் சாந்திவாசன், பத்திரிக்கை தொடர்பு – சிவக்குமார்.

இந்தப் படம் ஒரே நாளில்  நடக்கும் கதையில் உருவாகிறது. முழுக்க முழுக்க காமெடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஓரு எம்.எல்.ஏ.வுக்கும், ஓரு யூ டியூபருக்கும் இடையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டு எம்.எல்.ஏ.வின் கோபத்துக்கு ஆளாகிறார் யூ டியூபர். இந்தப்  பிரச்சனையில் இருந்து அந்த யூ டியூபர் தப்பினாரா.. இல்லையா..  என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படம் பற்றிய கூடுதல் விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Our Score