‘காற்றின் தேசமெங்கும் கானம் சென்று தங்கும்’ என்ற வரிகளுக்கேற்ப முழுக்க முழுக்க இசையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படம் மார்ச்-13-ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இசையில் கை தேர்ந்த இளைஞர்களைக் கொண்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கியிருக்கும் இப்படத்தில் 17 பாடல்கள் உள்ளன.
“மொழி பேதமில்லாமல் அனைவருக்கும் சென்றடையும் ஒரு கலை இசை. சர்வதேச அளவில் மியூஸிக்கல் படங்களுக்கு அதிக வரவேற்பு உண்டு.
அமெரிக்கா, கனடா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் ‘வானவில் வாழ்க்கை’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படம் உலகளாவிய ரசிகர்களையும் கவரும்..” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் இயக்குனர் ஜேம்ஸ் வசந்தன்.
Our Score









