இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் J.வடிவேல் முதன் முறையாக இயக்கும் ‘கள்ளப்படம்’ திரைப்படத்தின் பாடல்கள் நாளை வெளியிடப்படுகிறது. நடிகர் விஷாலின் ‘V Music’ ஆடியோ நிறுவனம்தான் இப்பாடல்களை வெளியிடுகிறது.
‘பூஜை’, ‘ஆம்பள’ பாடல்களின் வெற்றியை தொடர்ந்து ‘ V Music’ நிறுவனம், ‘கள்ளப்படம்’ திரைப்படத்தின் பாடல்களையும் வெளியிடுகிறது.
‘இசை’, ‘காக்கிசட்டை’ படங்களின் டிஜிட்டல் காலர் டியூன்களையும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கொண்டு சேர்த்த பெருமையும் இந்த ‘V Music’ நிறுவனத்தை சாரும்.
இறைவன் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். இயக்குநர் ஜெ.வடிவேல் இசையமைப்பாளர் ‘கே’-விடம் தனக்கு தேவையான இசையை அழகிய வடிவில் பெற்றிருக்கிறார்.
“ஒரு படத்தின் பாடல்களே அப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட பாடல்களை பட்டிதொட்டியெங்கும் கொண்டு செல்வது சிறந்த ஆடியோ நிறுவனத்தின் பணி. நல்ல ஆரம்பம் நல்ல முடிவையும் தரும். தாங்கள் வெளியிடும் பாடல்களை முன்னெடுத்து செல்வதில் பெரும் உழைப்பை செலவிடும் ‘V Music’ நிறுவனம் எங்களது பாடலை வெளியிடுவது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. V என்றாலே விக்டரி அல்லது வெற்றிதானே…” என்கிறார் புதுமுக இயக்குனர் வடிவேல்.









