காதலிகள் மாறிக் கொண்டே போனாலும் நண்பர் என்ற இடம் மட்டும் சிம்புவிடம் அப்படியேதான் இருக்கிறது. அது நடிகர் தனுஷ்தான்.. இருவருக்கும் எப்படித்தான் பற்றிக் கொண்டதோ தெரியவில்லை. ஆனால் ஆகாத நட்பு.. இப்போதும் வெந்து போய் தணலும் குறைந்து போய் அன்பாக போய்க் கொண்டிருப்பதைத்தான் கோடம்பாக்கம் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருக்கிறது..
எஸ்.எஸ். சக்கரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் சிம்பு – ஹன்சிகா நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “வாலு.” தமனின் இசையில் உருவாகியிருக்கும் வாலு படத்தின் பாடல்கள் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வாலு படத்தின் டிரெயிலர் நடிகர் தனுஷ் நடித்து வரும் 18-ம் தேதி வெளியாகவுள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் திரையிடலின்போது இடைவேளையில் ஒளிபரப்பப்படும் என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.