படங்களுக்கு சென்டிமெண்ட் பார்ப்பது என்பது சினிமாவுலகில் “இன்னிக்கு தலை சீவினியா?”ன்னு கேக்குற மாதிரி..!
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் வெற்றிக்குக் காரணம், அதன் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி தேவி தியேட்டரில் நடந்ததால்தான் என்று அந்தக் குழுவினர்.. குறிப்பாக சந்தானம் ரொம்பவே நம்புகிறாராம்.
அதனால் அதற்கடுத்த அவருடைய படமான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் இசை வெளியீடும் இதே தேவி தியேட்டரில்தான் கிடைத்த்து. ஏதோ இந்தப் படத்திற்கும் போட்ட காசு கையில் கிடைத்திருக்கும்போல.. மூணாவது முறையாக ‘வாலிப ராஜா’ படத்திற்கும் அதே தேவி தியேட்டரில் இசை வெளியீடு..
‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் இசை வெளியீட்டில் பவுன்சர்கள் ரகளை.. கண்ணாடி உடைப்பு. புவுன்சர்கள், ரசிகர்கள் மோதல்.. ரசிகர் மன்றத்தினரின் அலப்பறை.. என்றெல்லாம் செய்திகள் வெளியாகி இதற்கெல்லாம் பதில் சொல்லவே சந்தானத்திற்கு இன்னொரு மீட்டிங் வைக்க வேண்டியதாகியிருந்த்து. அதனால் எதுக்கு வம்பு என்று நினைத்தோ என்னவோ இந்த முறை சந்தானத்தின் ரசிகர் மன்றத்தினரும் மிஸ்ஸிங்.. சந்தானமும் மிஸ்ஸிங்..
தவிர்க்கவே முடியாத ‘லிங்கா’ பட ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டாருடன் கர்நாடகாவில் சிக்கிக் கொண்டாராம் சந்தானம். தலையே வரலைன்னா ரசிகர்கள் எப்படி வருவாங்க..? அதுனால விழா ரொம்ப ஹேப்பியாவே எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடந்து முடிந்தது..!
அப்போ இந்தப் படமும் சக்ஸஸ்புல்லா ஓடிருச்சான்னா இதையே சென்டிமெண்ட்டா எடுத்து அடுத்தடுத்த படங்களின் இசை வெளியீட்டு விழாவுக்கு சந்தானம் வராமல் போயிருவாரோன்னு யோசிக்க வேண்டியிருக்கு..!
ம்.. நடந்தாலும் நடக்கும்..!