full screen background image

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வா வாத்தியார்’ எனும் புதிய படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.  

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ‘வா வாத்தியார்’ படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி.எம்.சுந்தர், ரமேஷ் திலக், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் கார்த்தியின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதுடன்.. இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பதால் படம் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

Our Score