full screen background image

இருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..!

இருட்டுக்குப் பயப்படும் காவல் துறை அதிகாரியின் கதைதான் ‘V1’ திரைப்படம்..!

‘வட சென்னை’, ‘பேரன்பு’, ‘மகளிர் மட்டும்’, ‘குற்றம் கடிதல்’, ‘மெட்ராஸ்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள நடிகர் பாவெல் நவகீதன் தற்போது இயக்குநராகவும் மாறியுள்ளார். இவர் இயக்கும் முதல் திரைப்படத்தின் பெயர் ‘V1’.

pavel navageethan-1

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்தின் கதாநாயகனாக ராம் அருண் காஸ்ட்ரோ நடித்துள்ளார். கதாநாயகியாக விஷ்ணு பிரியா நடித்துள்ளார். மேலும் லிஜேஷ், மைம் கோபி, காயத்ரி, லிங்கா, மோனிகா, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கிருஷ்ணா சேகர் T.S., இசை –  ரோனி ரப்ஹெல், படத் தொகுப்பு – C.S.ப்ரேம் குமார், கலை – V.R.K. ரமேஷ், SFX – ஒளி சவுண்ட் லாப்ஸ், மிக்ஸிங் – M.R.ராஜகிருஷ்ணன், மக்கள் தொடர்பு – சதிஷ்(AIM). தயாரிப்பாளர் – அரவிந்த் தர்மராஜ், N.A.ராமு, சரவணன் பொன்ராஜ், வெளியீடு – பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பாவெல் நவகீதன்,

v1-movie-stills-4

இன்வஸ்டிகேட்டிவ் திரில்லரான இப்படம் முழுக்க, முழுக்க விறுவிறுப்பாக இருக்கும் வகையில் காட்சிக்கு காட்சி புதுப்புது யுக்திகளை அமைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் பாவெல் நவகீதன்.

v1-movie-stills-2

இத்திரைப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் பாவெல் நவகீதன், “ஒரு சிலருக்கு கூட்டத்தை பார்த்தால் பயம். அதிலும் சிலருக்கு அந்தக் கூட்டத்தின் முன் பேச வேண்டும் என்றால் பயம். கத்தியை பார்த்தால் பயம். இரத்தத்தை பார்த்தால் பயம் என்று பலருக்கு பல வகையான பயங்கள் இருக்கும். இப்படத்தின் கதாநாயகனுக்கு இருட்டு என்றாலே பயம்.

கதைப்படி கதாநாயகன் காவல் துறையில் வேலை பார்க்கும் ஒரு போலிஸ் அதிகாரி. ‘V-1’ என்ற எண்ணை கொண்ட விட்டில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலை பற்றி விசாரிக்க வேண்டிய கட்டாயம் கதாநாயகனுக்கு.

v1-movie-stills-1

இருட்டைப் பார்த்து பயப்படும் கதாநாயகன், இந்தக் கொலைக்கான மர்மத்தையும், கொலைக்காரனையும் கண்டு பிடித்தாரா… இல்லையா.. என்பதே இந்த ‘V1’ படத்தின் கதை…” என்றார்.

விரையில் வெளியாகவுள்ள இந்த ‘V1’  திரைப்படம் முழுக்க, முழுக்க சென்னையிலேயே படமாக்கப்பட்டுள்ளது.

பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக விநியோகஸ்தரான L.சிந்தன் இப்படத்தை வெளியிடுகிறார்.

Our Score