‘உத்தமவில்லனை’ கைப்பற்றியது ஈராஸ் நிறுவனம்..!

‘உத்தமவில்லனை’ கைப்பற்றியது ஈராஸ் நிறுவனம்..!

சினிமா தயாரிப்பு, விநியோகம், இசை நிறுவனம், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்று சினிமா துறை சார்ந்த பல்வேறு தொழில்களைச் செய்து வரும் ஈராஸ் நிறுவனம், கடைசியாக கோச்சடையான் படத்தைத் தயாரித்திருந்தது.

சமீபத்தில் கோச்சடையான் படத்தின் இயக்குநரான செளந்தர்யாவை தன்னுடைய நிறுவனத்தின் தென்னிந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது.

இதன் உடனேயே விஜய் நடிக்கும் கத்தி படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ஈராஸ் நிறுவனம் பெற்றது. இப்போது அதற்கும் ஒருபடி மேலே போய் கமல்ஹாசனின் அடுத்த படமான உத்தமவில்லன் படத்தின் விநியோக உரிமையை பெற்றிருக்கிறதாம்..!

இந்த ‘உத்தமவில்லன்’ படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், கமலின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. 

இந்தப் படத்தில் கமலுடன் ஆண்ட்ரியா, பூஜாகுமார், சித்ரா லட்சுமணன், இயக்குநர்கள் கே.விஸ்வநாத், கே.பாலசந்தர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.  தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதையாக உருவாகியுள்ள இப்படம் கமல் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score