சாராவுக்காக உத்ரா உன்னி கிருஷ்ணன் பாடிய பாடல்..!

சாராவுக்காக உத்ரா உன்னி கிருஷ்ணன் பாடிய பாடல்..!

குரல் வளம் என்பது பாரம்பரியத்துக்கு  உரியது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். இசை ஞானமும் அப்படிதான் என்றால் அது வரம் என்றுதான் கூற வேண்டும். சமீபத்தில்  ‘சைவம்’  படத்தின் பாடல் பதிவு  இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் இசை அமைப்பில், நா. முத்துகுமார் இயற்றிய  ‘அழகே… அழகே’  என்ற வரிகளுடன்  பதிவானது.

பாடலைப் பாடுவதற்காக பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் வந்திருந்தார். ஆனால் பாடியது அவர் இல்லை!  மழலை மாறாத ஒரு சின்னக் குயில்!!  அந்தக் குயிலுக்கு பாடல் பயிற்சி  கொடுத்து அழைத்து வந்திருந்தார் உன்னி கிருஷ்ணன். அந்தக் குயிலின் பெயர் உத்ரா உன்னி கிருஷ்ணன். மெய் மறக்கச் செய்யும் குரலில் நம்மை மயக்கிய உன்னி கிருஷ்ணனின்  மகள்தான் அவர்.

unnikrishnan_daughter1811_m

‘இந்த வயதில் இப்படி ஒரு ஆழ்ந்த இசை ஞானத்தை பார்த்ததே இல்லை… பயிற்சியாலோ, பாரம்பரியத்தாலோ மட்டும் வருவதில்லை இசை ஞானம் . அது ஒரு வரம் என்பதற்கு உதாரணம் உத்ரா  உன்னி கிருஷ்ணன்தான். குழந்தை நட்சத்திரம் சாராவுக்கு பொருத்தமான குரல் வேண்டும் என்று இயக்குனர் விஜய் மெனக்கெட, தேடல்  ஆரம்பித்தது.  தேடும்போது  கிடைத்த பொக்கிஷம்தான் இந்த  உத்ரா.

“உத்ராவின் குரலில் சாராவின் அபிநயத்தில் ‘அழகே அழகே’ பாடல் மிக வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். இயக்குனர் விஜய் உடன் இணைந்து நான் பணியாற்றிய படங்கள் அனைத்தும் இசையில் பெரும் வெற்றி பெற்ற படங்கள்.. இந்த படமும் விதிவிலக்கல்ல..” என்று குரலில் பெருமை பொங்க கூறுகிறார் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் .

‘அழகே அழகே ‘ பாடலின் teaser இன்று வெளியிடப்படுகிறது. SONY மியூசிக் ‘சைவம்’ படத்தின் இசை உரிமையை பெற்றிருக்கிறது . ‘சைவம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஏப்ரல் மாதம் 5-ம் தேதி நடை பெற உள்ளது .

Our Score