‘நெடுஞ்சாலை’ திரைப்படம் தீவிர சினிமா விமர்சகர்களிடத்தில் சில எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும், பொதுவாக ‘தப்பு செய்யாத படம்’ என்று விநியோகஸ்தர் தரப்பில் இருந்து வாழ்த்தைப் பெற்றுள்ளது.
‘இனம்’ திரைப்படத்தை திடீரென்று லிங்குசாமி வாபஸ் பெற்றுக் கொண்டதால் கிடைத்த தியேட்டர்களை இப்போது ‘நெடுஞ்சாலை’ திரைப்படம்தான் பில்லப் செய்திருக்கிறதாம்..
ஒரே காம்பளக்ஸில் ஓடுகின்ற படம் என்பதால் பல ஊர்களில் ‘நெடுஞ்சாலை’யை, ‘இனம்’ ஓடிய தியேட்டரில் அப்படியே மாற்றி ஓட்டுகிறார்களாம்.. இப்படி நேற்றிலிருந்து இந்தப் படத்திற்குக் கூடுதலாக 60 காட்சிகள் கிடைத்திருக்கிறதாம்.. இப்போது ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் இப்படம் 191 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது..!
ஒரே காம்ப்ளக்ஸில் 2 தியேட்டர்களில் ஓட்டியும் 60 சதவிகிதத்திற்கும் மேலாக கூட்டம் வருவதாக விநியோகஸ்தர்கள் தரப்பு சந்தோஷப்படுகிறது..!
‘நெடுஞ்சாலை’ திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி வெளியிட்டதே அப்படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். வரிசையாக உதயநிதி வெளியிடும் படங்களை வழக்கமாக திரையிடும் திரையரங்குகளில்தான் ‘நெடுஞ்சாலை’யும் திரையிடப்பட்டுள்ளது. இந்தத் திரையரங்குகள் இந்த முறை கொஞ்சமேனும் லாபத்தை பார்க்கும் என்று திரைக் கணக்காளர்கள் சொல்கிறார்கள்.
இது போன்று நல்ல படங்களை விநியோகஸ்தர்கள் உடனுக்குடன் அடையாளம் கண்டு தானே முன் வந்து வாங்கி வெளியிட்டால் அது தமிழ்த் திரையுலகத்திற்குத்தான் லாபமாக முடியும்..!