தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் நடித்திருக்கும் ‘உத்தரவு மகாராஜா’ திரைப்படம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் நடித்திருக்கும் ‘உத்தரவு மகாராஜா’ திரைப்படம்

இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புத்தம் புதிய கதைக் களத்தில் மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியிருக்கிறது ‘உத்தரவு மகாராஜா’ திரைப்படம்.

இந்தப் படத்தில் உதயா ஹீரோவாக நடித்திருக்கிறார். பிரியங்கா, சேரா, நிஷா என மூன்று கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். நடிகர் பிரபு முக்கியமான வேடமொன்றில் நடித்திருக்கிறார்.

மேலும் இப்படத்தில்  நாசர், கோவை சரளா, ஸ்ரீமன், மனோபாலா, M.S.பாஸ்கர், சரவணன், தனஞ்செயன், தளபதி தினேஷ், சோனியா போஸ், பிரேம் மற்றும் பல நட்சத்திரங்களுடன் நீண்ட இடைவெளிக்குப் பின் குட்டி பத்மினியும் நடித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் முதற்கொண்டு பெரும்பாலான முக்கிய நடிகர்கள் அனைவருமே இப்படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா. இவர் தமிழில் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ மற்றும் பல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர்.

இசையமைப்பாளர் – நரேன் பாலகுமாரன், படத் தொகுப்பு – சத்ய நாராயணன், நடனம் –சாண்டி, மக்கள் தொடர்பு – நிகில்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான ஆஸிப் குரைஷி இயக்கியிருக்கிறார். இவர் தமிழ், இந்தி மற்றும் பெங்காலி படங்களில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். 

படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஆஸிப் குரேஷி, “இந்த ‘உத்தரவு மகாராஜா’ படத்தின் சிறப்பம்சமே இதன் புதுமையான திரைக்கதைதான். இந்தப் படத்தின் கதையும், திரைக்கதையும் மற்ற வழக்கமான தமிழ்த் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். நகைச்சுவை, ஆக்சன் கலந்த சைக்கோ த்ரில்லர் கதை இது..” என்றார். 

Our Score