இயக்குநர் பா.ரஞ்சித் துவக்கி வைத்த ‘பற’ திரைப்படம்..!

இயக்குநர் பா.ரஞ்சித் துவக்கி வைத்த ‘பற’ திரைப்படம்..!

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பெவின்ஸ் பால் மற்றும் ரிஷி கணேஷ் இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பற.’

இந்த நிறுவனம் ஏற்கெனவே ‘கலிங்கா’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறது. இது இவர்களது இரண்டாவது திரைப்படமாகும்.

இந்தப் படத்தில் நித்திஷ் வீரா, சாந்தினி, வெண்பா, சாஜு மோன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகையர் நடிக்கின்றனர்.

ஔிப்பதிவு - சிபின் சிவன், இசை - ஜார்ஜ் வி.ஜாய், பாடல்கள் - உமா தேவி, சினேகன், படத் தொகுப்பு - சாபு ஜோசப், கலை – மகேஷ், தயாரிப்பு மேற்பார்வை – சிவசங்கர், இணை தயாரிப்பு – எஸ்.பி.முகிலன், தயாரிப்பு - பெவின்ஸ் பால், ரிஷி கணேஷ்.

இப்படத்தை இயக்குநர் கீரா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘பச்சை என்கின்ற காத்து’, ‘மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் இந்தப் படம் பூஜையுடன் துவங்கியது இயக்குநர் பா.ரஞ்சித் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.