full screen background image

உத்தமவில்லன் – போஸ்டரே சர்ச்சையானது..!

உத்தமவில்லன் – போஸ்டரே சர்ச்சையானது..!

கமல்ஹாசன் தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக எதையாவது புதிதாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அதனால்தான் அவர் பெயர் கலைஞானி.

விஸ்வரூபம் பாகம்-2 படத்திற்கு அடுத்து லிங்குசாமியின் தயாரிப்பில் ரமேஷ் அரவிந்தின் இயக்கத்தில் அவர் நடிக்கவிருக்கும் உத்தமவில்லன் படத்தின் போஸ்டர் நேற்றைக்குத்தான் வெளியிடப்பட்டது. உடனேயே தமிழ்ச் சினிமாவுலகம் மிக பரபரப்பாகி நேற்று இரவுக்குள் 1 லட்சம் பேர் அதனை பல்வேறு இணையத்தளங்களில் பார்வையிட்டுவிட்டார்கள்.

uthamavillan-poster-1

இந்த நிலைமையில் அந்நிறுவனம் வெளியிட்ட அந்த போஸ்டர், வேறொரு புகழ் பெற்ற பிரான்சு நாட்டை சேர்ந்த Eric Lafforgue என்ற புகைப்படக்காரரின் புகைப்படம் போலவே உள்ளது என்கிற தகவலும் இப்போது வெளியாகியுள்ளது.

eric_lafforgue_theyyam

புகைப்படத்தில் இருக்கும் இந்த டிஸைன் கேரளாவில் மலபார் பகுதியில் கொண்டாடப்படும் தேயம் என்கிற கலையின் வடிவமாம்.. இந்த நாட்டியத்தின் கலைஞர்கள் இது போன்றுதான் மேக்கப் போட்டு ஆடுவார்களாம்.. இதனைத்தான் அந்த பிரெஞ்சு புகைப்படக்காரர் புகைப்படமாக எடுத்து தனது வலைத்தளத்தில் வைத்துள்ளார்.

அதனை இந்தத் தளத்திற்குச் சென்று பார்க்கலாம்..

இந்தப் பிரெஞ்சு புகைப்படக்காரரின் புகைப்படத்தை காப்பி செய்துதான் இந்த உத்தமவில்லன் படத்தின் போஸ்டர் டிஸைனும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஓவியர்களின் வட்டாரத்தில் புகார்கள் எழுந்துள்ளன..

ஆரம்பமே இப்படியா…?

Our Score