full screen background image

கருத்தரிப்பு மையங்கள் பற்றிய காமெடி திரைப்படம் ‘உருட்டு உருட்டு’!

கருத்தரிப்பு மையங்கள் பற்றிய காமெடி திரைப்படம் ‘உருட்டு உருட்டு’!

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில் சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரித்திருக்கும் படத்திற்கு ‘உருட்டு உருட்டு’ என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர்.

நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ரித்விகா ஸ்ரேயா நடித்துள்ளார்.

மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, ஹேமா சின்னாலம்பட்டி சுகி, பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், ‘அங்காடித் தெரு’ கருப்பையா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் பாஸ்கர் சதாசிவம்.

படம் பற்றி இயக்குநர் பாஸ்கர் சதாசிவம் பேசும்போது, “அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான முழுக்க முழுக்க காமெடி படமாக இதை உருவாக்கி இருக்கிறோம்.

சுமார் 25, 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் ‘நாம் இருவர்; நமக்கு இருவர்’ என்ற விளம்பரம் பிரபலமாக இருந்தது,  அதுவே கொஞ்ச நாட்கள் கழித்து ‘நாம் இருவர்; நமக்கு ஒருவர்’ என்று மாறியது.

ஆனால் தற்போது அந்த விளம்பரங்களை எங்கேயும் பார்க்க முடிவதில்லை. அதற்குப் பதிலாக “குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா? எங்கள் மருத்துவமனைக்கு வாங்க..”  என்று அனைத்து மாவட்டங்கள்,  நகராட்சி, ஊராட்சி என எல்லா இடங்களிலும் கருத்தரிப்பு மையங்களை அதிகமாகக் காண முடிகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நகைச்சுவை கலந்து இன்றைய இளைய தலைமுறைகளுக்கு ஏற்றார் போல் சொல்கிறோம்.

பிரபல நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் நாகேஷ் இந்த படத்தில் அந்த கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.  ‘மூணு பொண்டாட்டி முனுசாமி’ கேரக்டரில் மொட்டை ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். அதேபோல் தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் ‘டபுள் டாக்மெண்ட்’  தர்மராஜ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நடன இயக்குநர் தினா மாஸ்டர் அருமையான நடன அமைப்பை கொடுத்துள்ளார்.

விரைவில் இந்தப் படத்தின் இசையில் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. தொடர்ந்து படத்தை திரையரங்களில் வெளியிட இருக்கிறோம்” என்றார் இயக்குநர் பாஸ்கர் சதாசிவம்.

Our Score