இயக்குநரும், நடிகருமான விஜய்குமார் ‘உறியடி’ மற்றும் ‘உறியடி 2’ என இரண்டு துணிச்சலான, அழுத்தமானப் படங்களை இயக்கி நடித்தவர். சமீபத்தில் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு வசனமும் எழுதியிருந்தார்.
தற்போது ஒரு ஆக்ஷன் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க விஜய்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
விருதுகள் வென்ற பல குறும்படங்களை தயாரித்திருக்கும் ரீல் குட் ஃபிலிம்ஸின் முதல் முழு நீள திரைப்படத் தயாரிப்பு இது.
இந்தப் படத்தை ‘உறியடி’ 2 பாகங்களிலும் விஜய்குமாரின் உதவி இயக்குநராக இருந்த அப்பாஸ் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் தொடங்கிவிட்டன.
மற்ற நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.
விரைவில் படப்பிடிப்பு செல்வதற்கு படக் குழு ஆயத்தமாகி வருகிறது.









