படத்தின் தரத்தில் சமரசமே கிடையாது – ‘உப்புக் கருவாடு’ படம் பற்றி இயக்குநர் ராதாமோகனின் பேச்சு..!

படத்தின் தரத்தில் சமரசமே கிடையாது – ‘உப்புக் கருவாடு’ படம் பற்றி இயக்குநர் ராதாமோகனின் பேச்சு..!

First Copy Pictures மற்றும் Night Show cinema தயாரிப்பில், இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன், நந்திதா நடித்துவரும்  திரைப்படம் ‘உப்பு கருவாடு’. இந்தப் படத்தின்  90 சதவிகித படப்பிடிப்பு வேலைகள் முடிந்து இப்போது பின்பணி வேலைகள் தயாராகி வருகிறது.

“ராம்ஜி நரசிம்மன் போல் ஒரு உறுதுணையான தயாரிப்பாளர் கிடைத்தால் படத்தை சொன்ன தேதியில்  என்ன அதற்கு முன்னரே முடித்து விடலாம்.  படத்தின் திறன் குறையாமல் குறுகிய காலத்தில் நான் எழுதியதை என் எண்ணத்தின்படியே கொண்டு வர உதவிய அத்தனை கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்.

தரத்திலும் திறத்திலும் சமரசம் செய்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. துரித வேகத்தில் படமெடுக்கும்போதுகூட அந்தக் கொள்கையை விட்டுக் கொடுக்காதவன் நான்.

மொழியின் முக்கியத்துவத்தை அறிந்தவன் நான் என்பதில் எனக்கு பெருமை. அந்த பெருமையே எனக்கு மொழி கெடாமல் dubbing செய்ய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. படப்பிடிப்பில் இருக்கும் கவனமும், நேர்த்தியும் என் படங்களின் டப்பிங்கிலும் இருக்கும்.

ஒரு சிறிய ரோல் கிடைத்தாலும் தனது நடிப்பால் அதை பதியச் செய்யும் ஒரு நடிகன் கருணாகரன். ‘உப்பு கருவாடு’ படத்தில் அன்றாடம் நம் பக்கத்து  வீட்டில் பார்க்கும் ஒரு இளைஞன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். தன்னை ஒரு கதாநாயகி என்று தன்னை குறுகிய வட்டத்தினுள் அடைத்துக் கொள்ளாமல் தனக்கான நல்ல கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு இனிமேலும் சரியான கதைகளும், படங்களும் கிடைக்க வேண்டும். அவ்வகையில் இவர்கள் இருவருக்கும் ‘உப்பு கருவாடு’ ஒரு சிறந்த படமாய் அமையும்.

M.S.பாஸ்கர், குமாரவேல், சாம்ஸ் என எனது ஆஸ்தான நடிகர் பட்டாளத்துடன் டான்ஸ் மாஸ்டர் சதீஷ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்டீவ் வாட்ஸ் இசையில் பாடல்கள்  ரசிகர்கள் மனதை கவரும் வகையிலும் கதையின் ஆழத்தைக் கூறும் வகையிலும் வந்துள்ளது. மேலும், அழகிய காட்சிகளால் மக்களை கவர ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி பேருதவி புரிந்துள்ளார்.

ரசிகர்கள் தங்களை பெரிதும் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரங்களின் மூலம் சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் விரைவில் வருகிறது ‘உப்பு கருவாடு திரைப்படம்..” என மிதமிஞ்சிய நம்பிக்கையுடன் கூறுகிறார் ராதா மோகன்.

Our Score