இயக்குநராக அவதாரமெடுக்கும் பிரபல சண்டை பயிற்சியாளர்..!

இயக்குநராக அவதாரமெடுக்கும் பிரபல சண்டை பயிற்சியாளர்..!

உலக நாயகனுடன் ‘வேட்டையாடு விளையாடு’, இளைய தளபதியுடன் ‘காவலன்’, சூர்யாவுடன் ‘கஜினி’ என அனைத்து உச்ச நட்சத்திரங்களுடன் சண்டை பயிற்சியாளராகப் பணியாற்றிய ‘ஸ்டன்’ சிவா தற்போது இயக்குநராக புதிய அவதாரமெடுத்திருக்கிறார்.

7 ஸ்டார் யூனிவர்சல் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடட் சார்பாக லேனி ஹவ் தயாரிக்கும் பெரியடப்படாத இந்தப் படத்தில் கெவின், ஸ்டிவின், லேனி ஹவ், ரோஹினி, ஜுனியர் பாலையா, நந்தா பெரியசாமி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

லேனி ஹவ் எழுதிய கதைக்கு, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ‘ஸ்டன்’ சிவா. இப்படத்தின் நாயகன் கதாபாத்திரத்துடன் படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் தன்னை ஒப்பிட்டு பார்க்கும் வகையிலும், இந்த நாயகனை போன்ற குணாதிசயங்கள் நமக்கும் தோன்றாதா என்று எண்ணும் வகையிலும் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்பக் கலைஞர்கள் :

இசை : கேரா ஜெரிமீயா

ஓளிப்பதிவு : என். எஸ். உதய்

படத்தொகுப்பு : ஆண்டனி

கலை : வெங்கட்

வசனம் : கார்க்கி, லேனி ஹவ்

பாடல்கள் : கார்க்கி, ரோகேஷ்

சண்டை பயிற்சி – ஸ்டன் சிவா

நடன பயிற்சி – நொபல்

ஸ்டில்ஸ் – ஸ்டில்ஸ் ரவி

தயாரிப்பு நிர்வாகம் : ராஜா ஸ்ரீதர்

மக்கள் தொடர்பு : நிகில்

Our Score