‘மொழி’, ‘பயணம்’, ‘அபியும் நானும்’ என்று குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் வகையில் படம் எடுத்த இயக்குநர் ராதா மோகனின் அடுத்த படமான ‘உப்பு கருவாடு’ இன்று தணிக்கை செய்யப்பட்டு ‘U ‘ சான்றிதழ் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் கருணாகரன், நந்திதா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, குமாரவேல், சாம்ஸ் நாராயணன், ரக்க்ஷிதா, சரவணன், பிரபல நடன கலைஞர் சதீஷ், டவுட் செந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி. ஸ்டீவ் வாட்ஸ் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார்.
“அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து பார்க்கக் கூடிய வகையில் இந்த ‘உப்பு கருவாடு’ படத்தை இயக்கி இருக்கிறேன்..படத்தின் இசை வெளியீட்டு தினமும், படம் ரிலீஸ் ஆகும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்…” என்கிறார் இயக்குநர் ராதா மோகன்.