நடிகர் உதயநிதி  ஸ்டாலினுடன் இணையும் இயக்குநர் சீனு ராமசாமி

நடிகர் உதயநிதி  ஸ்டாலினுடன் இணையும் இயக்குநர் சீனு ராமசாமி

பிரபல வெற்றிப் பட இயக்குநரான சீனு ராமசாமி தனது அடுத்தப் படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினை இயக்கவுள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில், இயக்குநர் பிரியதர்ஷனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நிமிர்’ திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கவுள்ளார்.

இது பற்றி நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “எனக்கு சீனு ராமசாமியின் படங்கள் மிக, மிக பிடிக்கும். அவரது படங்களில் மனித உணர்வும், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் கதை அம்சமும் நிச்சயம் இருக்கும்.

ஏற்கனவே அவருடைய இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற ‘நீர் பறவை’  படத்தை தயாரித்தவன் என்ற முறையில், இப்போது அவருடன் இணைந்து பணியாற்றுவது எனக்கும், எங்களது நிறுவனத்துக்கும் மிகுந்த சந்தோஷம்.

இப்போது அவரது இயக்கத்தில் தயாரித்து நடிப்பதில் எனக்கு  பொறுப்பும், விருப்பும் அதிகம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 19-ம் தேதி இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மற்ற நடிக, நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது..” என்றார்.

Our Score