சூர்யா நடிக்கும், ‘தானா சேர்ந்த கூட்டம்’, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘காட்டேரி ’.
இந்தப் படத்தில் வைபவ், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், ‘யூ ட்யூப் ’ புகழ் சாரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இதற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டீகே. படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, இசையமைக்கிறார் பிரசாத். இவர் ‘யாமிருக்க பயமே’ என்ற படத்தில் இயக்குநர் டீகேவுடன் இணைந்து பணியாற்றியவர். கலை இயக்குநராக செந்தில் பணியாற்றுகிறார்.
காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகவிருக்கும் இப்படத்தின் தொடக்க விழா இன்று காலை ஸ்டூடியோ கிரீன் அலுவலகத்தில் எளிமையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் கே.வி.ஆனந்த், புஷ்கர் காயத்ரி, ஆதிக் ரவிச்சந்திரன், ரவிமரியா, நடிகர்கள் ஜீவா, வைபவ், மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி, கருணாகரன், தயாரிப்பாளர்கள் சி.வி.குமார், தனஞ்ஜெயன், சக்திவேலன் ஆகியோர்களுடன் .நாக் ஸ்டூடியோஸ். கல்யாண், வி.ஜே. ரம்யா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
படத்தில் வைபவ்விற்கு ஜோடியாக நடிக்க வைக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.